மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழ கேசரி

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழ கேசரி

முக்கனிகளில் ஒன்றாக விளங்கும் வாழைப்பழத்தை இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள்கூட எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். அப்படிப்பட்ட வாழைப்பழத்தில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த வாழைப்பழ கேசரி, அனைவருக்கும் ஏற்றது; இந்த நாளை மேலும் சிறப்பாக்கக்கூடியது.

என்ன தேவை?

வாழைப்பழம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

ரவை - முக்கால் கப்

சர்க்கரை - கால் கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - ஒன்றரை கப்

முந்திரி - 4

உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காயவைக்கவும். அதில் முந்திரி, உலர்திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். பின்னர் அதை ரவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். ரவை சேர்ந்து வரும்போது அதில் வாழைப்பழம், சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்னர் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சையைத் தூவிப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: உடனடி சக்தி தரும் உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களா?

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021