மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

டி23 புலிக்குப் பெருகும் ஆதரவு: உயர் நீதிமன்றத்தில் மனு!

டி23 புலிக்குப் பெருகும் ஆதரவு: உயர் நீதிமன்றத்தில் மனு!

நீலகிரியில் சுற்றி திரியும் டி23 புலியைச் சுட்டுக்கொல்லும் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதியில் சுற்றி திரியும் டி23 என்ற புலி மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கி கொன்று வருகிறது. கடந்த எட்டு நாட்களில் மட்டுமே இருவரைத் தாக்கி கொன்றுள்ளது டி23 புலி. அதனால், அதைப் பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது. அதனால் போக்கு காட்டி வரும் புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டார்.

தற்போது சிறப்புக் கண்காணிப்பு குழுக்கள் புலியின் புகைப்படங்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் புலியை சுட்டுக் கொல்லக் கூடாது. அதை பிடித்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், மநீம கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் புலியைக் சுட்டுக் கொல்லும் உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவொன்று தாக்கல் செய்துள்ளார்.

அதில், “குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை. அதனால் புலியைச் சுட்டுக் கொல்லும் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, புலியைச் சுட்டுக் கொல்ல பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், தற்போது டி23 புலி விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 3 அக் 2021