மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: கம்பு பயறு உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: கம்பு பயறு உருண்டை!

தினை, வரகு, சாமை, குதிரைவாலி, சோளம், ராகி எனப் பல்வேறு சிறுதானியங்களில் செய்யக்கூடிய விதவிதமான ரெசிப்பிகளில் கம்பு – பச்சைப்பயறு கலந்து எளிதாகச் செய்யக்கூடிய இந்த உருண்டையும் சுவையானது. அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

எப்படிச் செய்வது?

100 கிராம் கம்பு, 100 கிராம் பாசிப் பயறு (பச்சைப்பயறு) இரண்டையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்துச் சலித்து வைக்கவும். பிறகு 150 கிராம் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சவும் (இளம் பாகாக வந்தால் போதும்). இந்தப் பாகுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். அரைத்துச் சலித்துவைத்துள்ள மாவில் வெல்லப்பாகை சேர்த்துக் கிளறி, இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். விருப்பப்பட்டால் மாவில் முந்திரிப்பருப்பு பொடித்துப் போட்டும் உருண்டைகள் செய்யலாம்.

சிறப்பு

சிறு தானியங்களில் கம்பு முக்கியமானது. இதில் உள்ள சத்துகளும் வேதிப்பொருட்களும் வைட்டமின்களும் அளவிட முடியாதவை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 3 அக் 2021