மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

வாகன ஆவணங்கள்: அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

வாகன ஆவணங்கள்: அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாகப் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இன்னும் இயல்பு நிலைக்குப் பல்வேறு துறைகளும் திரும்பவில்லை. இதனால், வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2020-க்குப் பிறகு காலாவதி ஆகும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் கடந்த மாதம் (செப்டம்பர் 30) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ஒரு மாதம் நீட்டித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 2 அக் 2021