மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில், தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை. சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(அக்டோபர் 2) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1994ஆம் ஆண்டு அரசாணைக்கு பின் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதனால், 1994ஆம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டது என்று வாதாடினார்.

இதையடுத்து அரசாணைகளை ஆய்வு செய்த நீதிபதி, பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் 1994ஆம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறிய நீதிபதி, இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டார். மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

சனி 2 அக் 2021