மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

நகைக்கடன் ஆய்வு: தினந்தோறும் அறிக்கை அளிக்க உத்தரவு!

நகைக்கடன் ஆய்வு: தினந்தோறும் அறிக்கை அளிக்க உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் அனைத்து நகைகளையும் ஆய்வு செய்து நாள்தோறும் 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போதுதான், நகைக்கடனில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளதும், சிலர் போலியான நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் 5 சவரன் மட்டுமில்லாமல் அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு ஒன்று அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இக்குழு நவம்பர் 21ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர் மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களும், தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய மொத்த நகைகளின் விவரம் ஆய்வு செய்ய தேவையான குழுக்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிராம் என்ற வீதத்தில் மொத்த நகைகளை ஆய்வு செய்ய தேவைப்படும் நாட்கள் மற்றும் 100 சதவிகித நகை கடன் ஆய்வு முடிவுறும் நாள் போன்ற விவரங்களை அறிக்கையாக தினம்தோறும் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 2 அக் 2021