மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: வேர்க்கடலை சிக்கி!

ரிலாக்ஸ் டைம்: வேர்க்கடலை சிக்கி!

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா... காந்திக்குப் பிடித்த உணவுகளில் வேர்க்கடலை முக்கியமானது. காந்தி ஜெயந்தி நன்னாளில் அவருக்குப் பிடித்த வேர்க்கடலையில் சிக்கி செய்து சுவைத்துப் புத்துணர்ச்சி பெறுவோம்.

எப்படிச் செய்வது?

அடிகனமான வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதனுடன் ஒரு கப் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து வெல்லம் முழுவதுமாகக் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பாகுப்பதம் வந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். உடனே வறுத்த தோல் நீக்கிய ஒரு கப் வேர்க்கடலையைச் சேர்த்து விரைவாகக் கிளறவும். வேர்க்கடலையும் பாகும் நன்றாகச் சேரும்படிக் கிளறவும். பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.பிறகு, ஒரு மரப்பலகையில் அரிசி மாவைத் தூவவும். அதில் கிளறி வைத்திருக்கும் வேர்க்கடலைக் கலவையைச் சூடு ஆறுவதற்குள் போடவும். பிறகு சப்பாத்திக் குழவியால் உடனடியாகக் கலவையைச் சமப்படுத்தவும். சூடு ஆறிய பிறகு இவற்றைச் செய்தால் கலவை மிகவும் கடினமாகிவிடும். பின்னர் கலவையின் சூடு சற்றுக் குறையும் போது (சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு) கத்தியால் வில்லைகள் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

சிறப்பு

வேர்க்கடலையில் மாங்கனீஸ், கால்சியம், தாமிரம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் உள்ளன. வேர்க்கடலையில் உள்ள எண்ணெய்ப்பசை எளிதில் ஜீரணமாகக்கூடியது என்பதால் அனைவருக்கும் ஏற்றதாகும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 2 அக் 2021