மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

கள்ளச்சாராயம் ஒழிப்பு: ஐந்து காவலர்களுக்கு விருது!

கள்ளச்சாராயம் ஒழிப்பு: ஐந்து காவலர்களுக்கு விருது!

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஐந்து காவலர்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ப.தெட்சணாமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர், வடக்கு மண்டலம், மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை, .மா.குமார், காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, வேலூர் மண்டலம்,பா.சக்தி, காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம், .ச.சிதம்பரம், காவல் உதவி ஆய்வாளர், முசிறி காவல் நிலையம், திருச்சி மாவட்டம், அசோக் பிரபாகரன், தலைமை காவலர் 352, சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஐந்து காவலர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருதையும், பரிசுதொகை ரூ.40 ஆயிரத்தையும் வழங்குவார்.

குடியரசு தினத்தன்று விருது வழங்கப்பட்டாலும், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 2 அக் 2021