மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பருப்பு தோசை

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பருப்பு தோசை

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். ‘வாழையடி வாழையாக வாழ வேண்டும்’ என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் இந்த வாழைப்பூ பருப்பு தோசை.

என்ன தேவை?

இட்லி அரிசி - அரை கப்

துவரம்பருப்பு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா கால் கப்

காய்ந்த மிளகாய் - 4

சீரகம் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பொடியாக நறுக்கிய வாழைப்பூ - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை காய்ந்த மிளகாயுடன் சேர்த்து ஒன்றாக இரண்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதில் சீரகம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து லேசாக நறநறவென இருக்கும்படி அரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சற்று கனமான தோசைகள் போல ஊற்றவும். இருபுறமும் எண்ணெய்விட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். இதை வெண்ணெய், நாட்டுச் சர்க்கரையுடன் சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ இஞ்சித் துவையல்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 2 அக் 2021