மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

கோயம்பேடு விற்பனையின்றி கொட்டப்படும் பூக்கள்!

கோயம்பேடு  விற்பனையின்றி கொட்டப்படும் பூக்கள்!

புரட்டாசி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லாதநிலையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களும் மூடப்பட்டுள்ளதால் கோயம்பேடு குப்பைமேட்டில் பூக்கள் விற்பனையின்றி மூட்டை, மூட்டைகளாகக் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூக்களின் விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே வீழ்ச்சி காண தொடங்கியது. தற்போது பூக்கள் விலை தாறுமாறாகக் குறைந்துள்ளது. வரத்து பாதிக்காத போதும், பூக்கள் விலை சரிவு, வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. அடிமாட்டு விலைக்கு பூக்கள் வந்துவிட்டபோதும், வாங்க ஆள் இல்லாததால் உற்பத்தி செய்யும் விவசாயிகளும், விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளும் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் பூக்களைக் கொட்டுவதுடன், தங்கள் வேதனையையும் விவசாயிகள் - வியாபாரிகள் கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் குப்பைமேட்டில் மூட்டை, மூட்டைகளாக பூக்கள் கொட்டப்பட்டு வருகிறது. காய்கறி கழிவுகளை காட்டிலும், குப்பைமேடு முழுவதும் பல வண்ணங்களில் கோபுரமாக கொட்டப்பட்டிருக்கும் பூக்கள், வியாபாரிகளின் கவலையைப் பிரதிபலிக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள கோயம்பேடு மார்க்கெட் காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.டி.அருள் விசுவாசம், “புரட்டாசி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை. அதேவேளை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால் தற்போது பூக்கள் விலை எந்த ஆண்டும் இல்லாத வகையில் படு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

குறிப்பாக ரோஸ், சம்பங்கி விலை (கிலோ) ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை ஆகிறது. மல்லி ரூ.250-க்கும், முல்லை ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.150-க்கும், அரளி ரூ.40-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், கோழிக்கொண்டை ரூ.20-க்கும், சாமந்தி ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. வரத்து பாதிக்காத நிலையிலும் பூக்களை வாங்கவும் ஆள் வருவதில்லை.

இதனால் பூக்களை என்ன செய்வதென்று தெரியாத விரக்தியில் குப்பையில் கொட்டி வருகிறோம். பூக்களைக் கொட்டும்போது எங்களுக்கு இருக்கும் வேதனையை சொல்லி மாளாது. இதுபோன்ற நிலையை நாங்கள் எப்படி கடக்க போகிறோம் என்றே தெரியவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் 6ஆம் தேதி முதல் நவராத்திரி தொடங்கவிருப்பதால் பூக்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 அக் 2021