மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

ஒரு மாதம் நடைபெறும் சுய உதவிக் குழுக் கண்காட்சி!

ஒரு மாதம் நடைபெறும் சுய உதவிக் குழுக் கண்காட்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை இன்று(அக்டோபர் 1) ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகள், துணி, கைவினைப் பொருட்கள் விற்பனைக் கடைகள் என 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன்,” ஒரு நாட்டினுடைய வளர்ச்சி கிராமப்பகுதியில் இருந்துதான் தொடங்குகிறது. அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த மறைந்த கலைஞர் கருணாநிதி கிராம பகுதியில் உள்ள பெண்களிடத்தில் பணபுழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1989 ஆண்டில் மகளிர் சுய உதவி குழுவை அமைத்தார். இடையில் வந்த ஆட்சியாளர்கள் அக்கறை எடுத்து கொள்ள வில்லை. 2006ஆம் ஆண்டு முதல்வராக கலைஞரும், உள்ளாட்சித் துறை அமைச்சராக, மு.க.ஸ்டாலினும் பொறுப்பில் இருந்தனர். அப்போது, அவர் எடுத்த முயற்சிகளால் மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை 5.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 1 கோடியே 25 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். கலைஞர் அவர்களால் விதைக்கப்பட்ட விதை, முதல்வர் அவர்களால் மரமாக வளர்க்கப்பட்டு, ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் தங்களுக்குள்ளே வரவு செலவு வைத்து கொண்ட மகளிர் உறுப்பினர்கள், தற்போது பொருட்களை உற்பத்தி செய்து, அதை வெளிசந்தையில் விற்பனை செய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளனர். இந்த கண்காட்சி ஒரு மாதம் நடைபெறும். கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்த கண்காட்சி நடைபெறவில்லை ” என்று கூறினார்.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வெள்ளி 1 அக் 2021