மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

கிராம சபை: சுகாதாரத் துறையினர் கலந்து கொள்ள உத்தரவு!

கிராம சபை:  சுகாதாரத் துறையினர் கலந்து கொள்ள உத்தரவு!

காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், சுகாதார துறையினர் கலந்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, 615 நாட்களுக்கு பிறகு நாளை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. கூட்டங்கள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறுகிற கிராம சபைக் கூட்டங்களில் பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பகுதி சுகாதார செவிலியர், வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார செவிலியர் இவர்களில் எவரேனும் ஒரு கிராம சபை வீதம் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு கலந்து கொண்டு, வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில் தொற்று நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, தாய் சேய் நலப்பணிகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து 5 நிமிடம் பொதுமக்களுக்கு இடையே கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டி ஊராட்சியில் நடைபெறுகிற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வெள்ளி 1 அக் 2021