மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: சோயா பீன்ஸ் சுண்டல்!

ரிலாக்ஸ் டைம்: சோயா பீன்ஸ் சுண்டல்!

சோயா என்றதும் பலருக்கும் தெரிந்தது சின்னச் சின்ன உருண்டைகளாக மளிகைக் கடைகளில் கிடைப்பதுதான். உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வதுதான் சிறந்தது. டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும் இந்த சோயா பீன்ஸ், தாவர உணவுகளில் அசைவத்துக்கு இணையான அதிக புரதம் கொண்டது.

எப்படிச் செய்வது?

அரை கப் சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து மூன்று விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும். கடாயில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீன்ஸைத் தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், மூன்று டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சிறப்பு

பல்வேறு சத்துகளைக் கொண்ட புரதச்சத்து மிகுந்த சோயா, மலச்சிக்கலை போக்கும். வளரிளம் பருவத்தினருக்கும் ஏற்றது இந்தச் சத்தான சுண்டல்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 அக் 2021