மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்போது?

முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்போது?

அக்டோபர் 4ஆம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வந்தது. தினசரி கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில்,நேற்று (செப்டம்பர் 30) கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், “அனைத்து கல்லூரிகளிலும் இளநிலை இரண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன.

2021- 2022ஆம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தங்களது மண்டலத்துக்குட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துவதோடு, கல்லூரி வளாகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிவதையும், சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்றப்படுவதையும் கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 1 அக் 2021