மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ இஞ்சித் துவையல்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ இஞ்சித் துவையல்

பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப்போக்கு உண்டாகும் நேரங்களில் இந்த வாழைப்பூ இஞ்சித் துவையல் செய்து உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.

என்ன தேவை?

நறுக்கிய வாழைப்பூ இதழ்கள் - முக்கால் கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய்த் துருவல் - கால் கப்

இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்),

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வாழைப்பூ, இஞ்சி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், புளி சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி இறக்கவும். ஆறியதும், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூத் தொக்கு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 1 அக் 2021