மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

தற்காலிக பேராசிரியர்களின் சம்பளம் உயர்வு!

தற்காலிக பேராசிரியர்களின் சம்பளம் உயர்வு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களைப் பணியமர்த்திக் கொள்ள உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1,661 தற்காலிக பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.15,000 வீதம், 11 மாதங்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் 15,000 ரூபாயிலிருந்து, 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 29) உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், “2021 - 2022ஆம் கல்வி ஆண்டிலும், 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 சுழற்சி முறையில் பாடப்பிரிவுகளை நடத்த ஏதுவாக 1,661 தற்காலிக பேராசிரியர்களைப் பணியமர்த்திக் கொள்ளலாம். இவர்களுக்கு மாதம் ரூ.20,000 வீதம் 11 மாதங்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படும். இவர்களை மார்ச் 2022 வரை பணியமர்த்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.36.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு கவுரவ விரிவுரையாளர்களின் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 30 செப் 2021