மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

நாளை முதல் ஓடும் ஏசி பஸ்கள்!

நாளை முதல்  ஓடும் ஏசி பஸ்கள்!

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 1) முதல் மீண்டும் ஏசி பஸ் சேவை தொடங்க இருப்பதால் பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி நிறுத்தப்பட்ட பஸ் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் குளிர்சாதன வசதி கொண்ட (ஏசி) பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏசி பஸ்களை இயக்க தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஏசி பஸ்களின் சேவை தொடங்கப்பட இருப்பதால் ஏசி பஸ்களை தயார் செய்யும் பணிகளில் போக்குவரத்து பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகப் பணிமனையில் உள்ள ஏசி பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், ஏசி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்றார்போல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்களை இயக்கலாம் எனப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களுக்குக் கூடுதல் பஸ்களை இயக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பஸ்கள், சொகுசு பஸ்களும் இதில் அடங்கும். 300 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 30 செப் 2021