மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம்!

அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம்!

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வாங்குவோரின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல் துறையினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்,” முன்விரோத கொலை சம்பவங்களை தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட "ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம்" என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப் பட்டது. அதில் 2,548 பேர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இது போன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தவும் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் மற்றும் தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.

அரிவாள் போன்ற ஆயுதங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகம் இல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.

அரிவாள் தயாரிக்கும் கடை மற்றும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 30 செப் 2021