மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

டீக்கடையில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சு

டீக்கடையில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சு

தர்மபுரியில் டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தவர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். எங்கு சென்றாலும் சரி நடைபயிற்சி மேற்கொள்வதை நிறுத்தமாட்டார். இந்நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தர்மபுரிக்கு வந்தார்.

வழக்கம்போல் இன்று(செப்டம்பர் 30) காலை தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி என்ற கிராமத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர், அந்த வழியில் கண்ணில் பட்ட டீக்கடை ஒன்றுக்குள் நுழைந்தார். அங்கு நான்கைந்து பெரியவர்கள் டீ குடித்து கொண்டிருந்தார்கள். அப்படியே தனக்கும் ஒரு டீ சொன்ன அமைச்சர், அங்கிருந்தவர்களிடம் தடுப்பூசி போட்டுவிட்டீர்களா என்று கேட்டார். அப்போது ’தனக்கு சுகர் இருக்கு ….அதனாலதான் போடவில்லை’ என்று ஒரு பெரியவர் கூறினார்.

“ஒண்ணுமில்லை ,, எனக்கும் 25 வருடமாக சுகர் இருக்கு. ஆனால், நான் இரண்டு தடுப்பூசியும் போட்டுக்கிட்டேன். ஒண்ணும் ஆகல. சுகர், பிரஷர் இருக்கிறவங்கதான் கண்டிப்பாக தடுப்பூசி போடணும். தடுப்பூசி போட்டுகிட்டதான் நம்மள மாதிரியான ஆளுங்க, கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். தடுப்பூசி போட்டவங்களுக்கு 97.5 சதவிகிதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உடலில் பாதுகாப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

அதற்கிடையில் மற்றொரு பெரியவர், பிபி அதிகமாக இருக்கிறதால…தலை சுத்து இருக்கிறது என்று கூறினார்… பிபி மாத்திரை போட்டு, கண்ட்ரோல் பண்ணிகிட்டு அப்புறம் தடுப்பூசி போட்டுக்கோங்க.. தடுப்பூசி போடும்போது அங்கே சுகர், பிரஷர் செக் பண்ணிட்டுதான் தடுப்பூசி போடுவாங்க” என்று கூறிய அமைச்சர் ” என்னப்பா ஆச்சு டீ” என்று கேட்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 30 செப் 2021