மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

நடுராத்திரியில் மூதாட்டிக்கு உதவிய போலீசார்!

நடுராத்திரியில் மூதாட்டிக்கு உதவிய போலீசார்!

திருநெல்வேலியில் நள்ளிரவில் தெருவுக்கு வந்து புகார் தெரிவித்த மூதாட்டிக்கு காவல்துறையினர் உடனடியாக உதவி செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே சில நாள்களுக்கு முன்பு சாதி மோதல் காரணமாக இரு சமூகங்களைச் சேர்ந்த இரண்டு பேர் அடுத்தடுத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்துள்ளது.

அதனால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கோபாலசமுத்திரம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காவலர்கள் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கோபாலசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் தகராறு செய்வதாகவும், அதனால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

அவருக்கு என்ன பிரச்சினை என்பதை உடன் சென்று பாருங்கள் என்று மூதாட்டியுடன் காவலர் ஒருவரை அனுப்பி வைத்தார் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். மூதாட்டி வீட்டுக்குச் சென்ற காவலர் தகராறில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து இனிமேல் மூதாட்டிக்கு தொந்தரவுக்கு தரக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்து, பிரச்சினையை முடித்துவைத்தார்.

நள்ளிரவில் புகார் தெரிவித்த உடனேயே வந்து பிரச்சினையை முடித்து வைத்த காவலருக்கு மூதாட்டி உள்பட அக்கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 30 செப் 2021