மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கில் சிகிச்சையில் இருந்து வந்தனர். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவ துறையைச் சார்ந்த பணியாளர்களின் சேவை இன்றியமையாதது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார ஊழியர்கள் என அனைவரும் இரவும், பகலும் கொரோனா வார்டில் பணியாற்றினர். அந்த வகையில் தன்னலம் கருதாமல் பணிபுரிந்து வந்த பல மருத்துவர்கள்,செவிலியர்கள் தங்கள் இன்னுயிரையும் இழந்துள்ளனர். அதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 53 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 30 செப் 2021