மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: கமர் கட்!

ரிலாக்ஸ் டைம்: கமர் கட்!

இன்றைய குழந்தைகள் பலருக்கு இந்தப் பெயர்கூட தெரிந்திருக்காது. கடிக்க முடியாத அளவு கடுமையான தேன்கலர் அல்லது சற்று கருமையான கமர்கட், ஒரு கமர்கட் வாயில் போட்டால் அது மெதுவாக கரைந்து கரைந்து சுவையில் நாம் கரைந்து கடைசியில் பல்லில் சிக்கும் தேங்காய் துணுக்குகள்கூட வெகு நேரம் சுவைக்கும். அத்தகைய கமர் கட்டை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

இரண்டு கப் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கப் தேங்காய்த் துருவலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். விருப்பப்பட்டால் இறுதியாக பொடித்த ஏலக்காய் சிறிதளவு சேர்க்கலாம். பாகு இறுகி, ஒரு கட்டத்தில் அதிரச பாகு பதம் வரும். அதாவது, சிறிது எடுத்து தண்ணீரில் போட்டால் ஒட்டாமல் உருண்டை பிடிக்க வருவது சரியான பதம். அப்போது அடுப்பில் இருந்து அகற்றி வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஆற விடவும். கை பொறுக்கும் சூடு வந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

குறிப்பு

கையில் சிறிது அரிசி மாவு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி உருட்டினால், நன்கு உருட்ட வரும். நடுத்தர தீயில் வேக வைத்தால் சுவையும், செல்ஃப் லைஃப் எனப்படும் வைத்திருக்கும் காலமும் கூடும். வெல்லத்துக்குப் பதில் கருப்பட்டியிலும் செய்யலாம்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 30 செப் 2021