மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு: மனு தள்ளுபடி!

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்  வயது அதிகரிப்பு: மனு தள்ளுபடி!

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று(செப்டம்பர் 29) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த நீதிபதிகள், இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடர தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 30 செப் 2021