மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

பண்டிகை: தேவைப்பட்டால் 144 தடை உத்தரவைப் போடுங்கள்!

பண்டிகை: தேவைப்பட்டால் 144 தடை உத்தரவைப் போடுங்கள்!

பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை காரணமாக கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை மற்றும் நவம்பர் மாதத்தில் தீபாவளி, டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இந்தப் பண்டிகைகளைப் பெருமளவிலான மக்கள் கொண்டாடுவதால் கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். அதனால், பண்டிகை காலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு நேற்று (செப்டம்பர் 28) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேசமயம் பண்டிகை காலம் நெருங்குவதால், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும். திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடினால், அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமாகியுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மக்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் 144 தடை உத்தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

புதன் 29 செப் 2021