மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல் விலை மேலும் உயரும் அபாயம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல் விலை மேலும் உயரும் அபாயம்!

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்து தினங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரைக் கடந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்து வருகின்றன.

இதற்கிடையில் விலையைக் கட்டுக்குள் வைக்க கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து, சப்ளையையும் குறைத்திருந்தனர். ஆனால், தற்போது தேவை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் உற்பத்தி விகிதமானது அதிகரிக்கப்படவில்லை. இதனால் விலையானது மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஐந்து தினங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரைக் கடந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று (செப்டம்பர் 29) பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் 15 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 94 ரூபாய் 71 காசுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 29 செப் 2021