மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கும் ஒன்றிய அரசு!

ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கும் ஒன்றிய அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வருவாய் இடைவெளியைப் போக்குவதற்காக நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.12.05 லட்சம் கோடி மொத்த கடன் வாங்க வேண்டியிருக்கும் என 2021-22ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ரூ.7.02 லட்சம் கோடி (60 சதவிகிதம்) நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டது.

அதன்படி பத்திரங்கள் வெளியீடு மூலம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7.02 லட்சம் கோடி பெறப்பட்டது. எனினும் நிகர கடன் 9.37 லட்சம் கோடியாக இருந்தது.எனவே இரண்டாவது பாதியில் மீதமுள்ள ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வருவாய் இடைவெளியை போக்குவதற்காக நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்கம் ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

இதைப்போல மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான நிதியை வெளியிடுவதற்கான காரணிகளும் இதில் அடங்கும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மொத்த கடனில், முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்துவதும் அடங்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

புதன் 29 செப் 2021