மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறையா?

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறையா?

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்கிற செய்தி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் மற்றும் சில பத்திரிகைகளில் கடந்த இரு தினங்களாக வேகமாகப் பரவி வருகிறது.

உண்மையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 9ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ஆம் தேதி ஆயுத பூஜை, 15ஆம் தேதி விஜய தசமி, 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 19ஆம் தேதி மிலாடி நபி, 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதே விடுமுறை நாட்களாகும்.

வழக்கமான வார விடுமுறை நாட்களான (ஞாயிறு ஐந்து நாட்கள், சனி இரண்டு நாட்கள்) ஏழு நாட்கள் தவிர்த்து 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, 14 மற்றும் 15ஆம் தேதிகள் ஆயுத பூஜை, விஜய தசமி, 19ஆம் தேதி மிலாடி நபி என்று கூடுதலாக நான்கு நாட்கள் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் மட்டுமே அக்டோபர் மாதத்தில் வரும் விடுமுறை நாட்களாகும்.

ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விழாக்கள் கொண்டாடப்படுவதால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது என்பதே உண்மை.

இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் சேவை தொடர்ந்து நடைபெறும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

புதன் 29 செப் 2021