மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

உரிமை கோரப்படாத வாகனங்கள் மூலம் ரூ.2.60 கோடி வருவாய்!

உரிமை கோரப்படாத வாகனங்கள் மூலம் ரூ.2.60 கோடி வருவாய்!

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோராமல் உள்ள வாகனங்களை ஏலம் விட்டதன் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் வாகன விதிமீறல் உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறை மூலம் பிடிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் காவல் நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து வாகனத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டும், வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் அனைத்து வாகனங்களையும் ஏலம் விட காவல்துறை முடிவு செய்தது.

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,” சட்டப்பேரவையில் 13.09.2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட, இதுவரை உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி, காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த, திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்கள்,தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்கள், கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று திருப்பூர் மாநகர காவல்துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 1,222, நான்கு சக்கர வாகனங்கள் 103 மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ரூ.2.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத, பழுதடைந்த வாகனங்களை ஏலம்விட்ட காவல் ஆணையர்களையும், காவல் கண்காணிப்பாளர்களையும் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 29 செப் 2021