மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து!

திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஓடிக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் கார்,பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

நேற்றிரவு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திருச்சியிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து இன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் கீழ்ப்புறத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே பேருந்தை ஓரம் கட்டிய ஓட்டுநர், பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளார். சிறிது நேரத்திலேயே கரும்புகை அதிகரித்து, பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள்ளேயே மளமளவென தீப்பற்றி எரிந்து பேருந்து முழுவதும் கருகியது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.போக்குவரத்து துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பேருந்திலிருந்து புகை வந்தவுடனேயே சுதாரித்துக் கொண்டு அனைவரும் இறங்கியதால் பலத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 29 செப் 2021