மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

செல்லபிராணிக்காக கண் கலங்கிய தலைமை நீதிபதி!

செல்லபிராணிக்காக கண் கலங்கிய தலைமை நீதிபதி!

படித்தவர்கள் தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.விலங்குகள் நம்மிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கின்றன என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி கண் கலங்கி பேசினார்.

உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி இன்று(செப்டம்பர் 29) சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இலவச ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பனர்ஜி,மருத்துவர் ராணி கவுர் பனர்ஜி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வகுமார், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரேபிஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆன்லைன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி,” சீட்டுக்கட்டில் ஜோக்கர் இருப்பது சிறந்தது. அந்த சீட்டுக்கட்டுகளில் நாம்தான் ஜோக்கர்கள். கடந்த 16-18 மாதங்களாக விலங்கு போன்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம். விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியவர்,

தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

”நானும், என் மனைவியும் ஜனவரியில் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு சாலை வழியாக வந்தபோது, சாலையில் உள்ள செல்லப்பிராணிகள் எங்களுடன் வந்தன.

குழந்தைபோன்று நாங்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாய் 13.5 வயதில் சென்னை வந்தவுடன் இறந்துவிட்டது. மனிதனோடு ஒப்பிட்டால் 92 வயதுக்கு சமம்” என்று கூறியவர் கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “செல்லப்பிராணி இறந்த பிறகு வளர்ப்பதற்கு நாய்களை நிறைய பேர் கொடுத்தனர். அதனை வளர்க்காமல், தெருவோர நாய்களை பராமரித்து வருகிறோம். அதனால், படித்தவர்கள் தெருவோர நாய்களை வளர்க்க முன்வர வேண்டும். விலங்குகள் நம்மிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கின்றன. அதை நாம் புரிந்து கொள்வதில்லை” என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார்,” நாய் கடித்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது. உடனடியாக உரிய மருத்துவரை அணுக வேண்டும். அதேபோன்று செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

வண்டலூரில் அனைத்து விலங்குகளும் தற்போது நலமாக உள்ளன. அங்கு ஒரு சில விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது மனிதர்களுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சை முறை பின்பற்றப்பட்டது.

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புற்கு கடந்த ஆண்டை விட 20-25% விண்ணப்பங்கள் அதிகமாக இந்தாண்டு பெறப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியிடும் போது கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 29 செப் 2021