மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பீர்க்கங்காய் பக்கோடா!

ரிலாக்ஸ் டைம்: பீர்க்கங்காய் பக்கோடா!

நீர்க்காய்கறிகள் சத்துமிக்கவை... உடல் உஷ்ணத்திலிருந்து நிவாரணம் அளிப்பவை... உடல் இளைக்க உதவுபவை. இப்படி இவை நமக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளம்... இவற்றில் எவ்வளவுதான் சத்துகள் நிரம்பியிருந்தாலும் சுவையாக செய்து பரிமாறினால்தானே குடும்பத்தினர் விரும்பிச் சாப்பிடுவார்கள்... அதற்கு இந்தப் பீர்க்கங்காய் பக்கோடா உதவும்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, அரை டீஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு, சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். அதில் தோல் சீவி மெல்லியதாக நறுக்கிய கால் கிலோ பீர்க்கங்காய், மெல்லிய, நீள துண்டுகளாக நறுக்கிய பத்து பச்சை மிளகாய், நறுக்கிய 100 கிராம் வெங்காயம், துருவிய இரண்டு டீஸ்பூன் இஞ்சி, தோலுடன் நசுக்கிய 20 பூண்டு பற்கள், இரண்டு ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை உதிர் உதிராகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் அனைத்து வயதினரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

புதன் 29 செப் 2021