மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் தடை செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் அடிமையாகி உள்ளனர். இதன் காரணமாக மனநல பிறழ்வு, நடத்தை மாற்றம், சமூக மற்றும் தனிநபர் வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகிய பிரச்சினைகள் எழுகின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் பலர், தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நடித்து, சைபர் கிரைம் மற்றும் கலாச்சார சீரழிவு ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 28) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, துரைசுவாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆன்லைன் விளையாட்டுகள் என்பது தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து நிவாரணம் தேடியிருக்கலாம். அவ்வாறின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது நீதிமன்றத்தை நேரத்தை வீணடிக்கக் கூடிய செயல் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 29 செப் 2021