மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சில்லி ஃப்ரை

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சில்லி ஃப்ரை

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் பலரையும் பாதிக்கும் பிரச்சினை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே இந்த வாழைப்பூ சில்லி ஃப்ரை செய்து ஃபாஸ்ட் ஃபுட் வேட்கையைத் தணித்துக்கொள்ளலாம்.

என்ன தேவை?

நறுக்கிய வாழைப்பூ இதழ்கள் - 2 கப்

மைதா - 4 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

மசாலா ஊறவைக்க:

தயிர் - 6 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாழைப்பூவில் மசாலாவுக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதில் உப்பு, மைதா, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசிறிவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைப்பூ இதழ்களை உதிரி உதிரியாகப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூச் சம்பல்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 29 செப் 2021