மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய செப்டம்பர் வரையிலான நீரைத் திறக்கும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியது. செப்டம்பர் 23 வரை 37.3 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை.

அக்டோபர் மாதத்துக்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 73.69 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. குடிநீர் தேவைக்காக தினசரி 7,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்குத் தற்போது தினசரி வரும் தண்ணீரின் அளவு 8,000 கன அடி ஆகும். இந்த நிலையில் குறுவைப் பயிரில் 47 சதவிகிதம்தான் அறுவடை முடிந்திருக்கிறது. அதனால் காவிரியில் இப்போது தண்ணீர் திறந்துவிடுவது கடினம் என்ற நிலையில் கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021