மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டுமானப் பணிகள் நிறுவனமான டாடா திட்டங்கள் குழுமம் சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டப் பணிகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து டாடா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2,100 கோடி ரூபாய் செலவில் சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டம் (வடக்கு துறைமுக அணுகு சாலை) அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் பாகமாக, ஆந்திர மாநில நெடுஞ்சாலை எண் ஏ.ஹெச்-45 வழியாக எண்ணூர் துறைமுகம் தட்சூர் பகுதியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சென்னை வெளிப்புற ரிங் ரோடுடன் வடக்கு துறைமுக அணுகு சாலையும் இணைக்கப்படும்.

ஆறு வழிச் சாலையாக அமையவுள்ள இந்தச் சாலையின் மொத்த நீளம் 25.38 கிலோமீட்டர். பக்கிங்காம் கால்வாய் மேலே 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரு பாலமும் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் மூன்று வருடங்களில் நிறைவடைய உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 26 கட்டுமானங்கள் வர உள்ளன. அவற்றுள் எட்டு பெரிய பாலங்கள், எட்டு சிறிய பாலங்கள், இரண்டு சாலை மேம்பாலங்கள், ஏழு சுரங்க வழி சாலைகள், ஒரு மாற்று சாலை ஆகியன அடக்கம்.

இந்தச் சாலை அமைக்கப்பட்ட பின், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இதனால் பயண நேரமும் குறைக்கப்படும். இந்தத் திட்டத்தால் சாலை அமையவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்” என்று கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021