மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

தண்டவாளத்தின் நடுவே தூங்கிய நபர்!

தண்டவாளத்தின் நடுவே தூங்கிய நபர்!

கோவையில், ரயில் வருவது கூட தெரியாமல் மதுபோதையில் தண்டவாளத்தின் நடுவே ஒருவர் தூங்கி கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் இடையே தினமும் மெமோ என்ற பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 614 பேர் இருக்கையில் அமர்ந்தும், 1781 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி செல்வோரும், அங்கிருந்து கோவை வருவோர்களுக்கும்இந்த இரயில் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,வழக்கம்போல்,நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் நடுவே ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார்.

தொடர்ந்து சத்தம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. அதனால் ரயிலை நிறுத்த எஞ்சின் டிரைவர் முயற்சி செய்தபோது, சில ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.

ரயில் சில அடி தூரம் தாண்டி நின்ற உடனே, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை தேடினர். அப்போது அந்த நபர் எந்த வித காயமும் இன்றி கூலாக தூங்கி கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை தட்டி எழுப்பி தண்டவாளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். போதையில் இருந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்த பின்னர், ரயில் மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021