மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

அதிகரிக்கும் உப்பு உற்பத்தி: மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்!

அதிகரிக்கும் உப்பு உற்பத்தி: மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்!

அதிகளவு உப்பு உற்பத்தியாலும், சந்தையில் தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், மாரியூர், முந்தல், திருப்புல் லாணி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, நதிப்பாலம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஊரடங்கு காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

வழக்கமாக ஆறு மாத சீசனுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி இருக்கும். மற்ற ஆறு மாதங்களில் இருக்காது. வழக்கமாக மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும். நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தலால் உற்பத்தி பணிகள் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதால், உப்பு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது ஓர் ஏக்கரில் தினசரி நான்கு டன் உப்பு கிடைக்கிறது.

சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தொடர்ந்து உப்பு எடுக்கப்படுகிறது. அதிகளவு உப்பு உற்பத்தியாலும், சந்தையில் தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஏராளமான பணியாளர்களைக் கொண்டு உப்பளப் பணிகள் நடந்து வருகின்றன.

ராமநாதபுரத்தில் தயாரிக்கப்படும் உப்பு சமையலுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பைத் தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இங்கு கடல் நீரில் உப்பு தயாரிப்பதில்லை. போர்வெல் அமைத்து மோட்டார் பயன்படுத்தி பாத்திகளில் நிறைத்து வைக்கின்றனர். வெப்பத்தில் ஆவியாகி உப்பாக மாற்றம் பெறுகிறது. உப்பு வாரிய பின் அந்த நிலத்தில் உள்ள கழிவுநீரை மீண்டும் பாத்திகளில் நிறைத்து, உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் கழிவுகள் அதிகம் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 28 செப் 2021