மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுகின்றன: நீதிபதிகள் கவலை!

உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுகின்றன: நீதிபதிகள் கவலை!

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளாது.

நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்படவுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(செப்டம்பர் 28) காலை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பட்டாசு தயாரிப்பின்போது விதிமுறைகள் மீறுவதால் அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

மீண்டும் இந்த வழக்கு பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,” உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெரிய சரவெடி பட்டாசுகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம். அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பெரிய பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்று தெரிவித்தனர்.

சரவெடி தயாரிப்பதில்லை, சின்ன சின்ன பட்டாசுகளை வாங்கி இணைத்து விடுகிறார்கள் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தாக்கல் செய்த விவரங்களை பார்த்தால், விதிமீறல்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள், உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுவதை தடுக்க காவல் ஆணையர் பொறுப்பேற்கவேண்டும் என்றனர்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு(செப்டம்பர் 29) ஒத்திவைத்தனர்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021