மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு ரவை ஸ்டிக்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: உருளைக்கிழங்கு ரவை ஸ்டிக்ஸ்!

உருளைக்கிழங்கை சமையலில் எந்த விதத்திலும் பயன்படுத்தி ருசிக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிப்ஸ் அல்லாமல், வீட்டிலேயே இந்த உருளைக்கிழங்கு ரவை ஸ்டிக்ஸ் செய்தும் அசத்தலாம்.

எப்படிச் செய்வது?

முதலில் இரண்டு பெரிய அளவு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு கப் ரவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்க்கவும். ரவை, சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அந்த ரவையில் மசித்துவைத்த உருளைக்கிழங்கு, இரண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்பு அதை விரல் நீள ரோல்களாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

சிறப்பு

கார்போஹைட்ரேட் சத்துகள் நிறைந்த உருளைக்கிழங்கு, அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஓர் உணவு வகையாக உருளைக்கிழங்கு கருதப்படுகிறது.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021