மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

பொழுதுபோக்கு கிளப்புகளில் சோதனை நடத்த உத்தரவு!

பொழுதுபோக்கு கிளப்புகளில் சோதனை நடத்த உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் செயல்பட்டு வரும் பாண்டியன் என்ற பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டது. அதில், சட்டத்துக்குட்பட்டுதான் கிளப் நடத்தப்படுகிறது. ஆனால் சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்துகின்றனர். அதனால், போலீஸ் சோதனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 28) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மனுதாக்கல் செய்துள்ள கிளப் மீது கிரிமினல் வழக்கு மற்றும் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு துறை ஐஜியை, எதிர் மனுதரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதி, அவர் சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் கிளப்புகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கிளப்புகளின் பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுகுறித்து 12 வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021