மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

பணிநிரந்தரம் : செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பணிநிரந்தரம் : செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பணிநிரந்தரம் செய்யக்கோரி, சென்னை தேனாம்பேட்டையில் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் மருத்துவத் துறையில் கூடுதலாக பணியாட்கள் தேவைப்பட்டனர். அதனால், கொரோனா பணிக்காக மருத்துவ பணிநியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் மூன்று கட்டங்களாக செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

முதல் மற்றும் மூன்றாம் கட்டமாக தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2750 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், இரண்டாம் கட்டமாக தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தங்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் செவிலியர்கள் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் செவிலியர்களுக்கான நிரந்தப் பணி நியமனம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கைகள் கொண்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ”வேண்டும் வேண்டும் பணி நிரந்தரம் வேண்டும், வேண்டும் வேண்டும் எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், செவிலியர்களுக்கான மாத ஊதியமான ரூ.14 ஆயிரத்தை மாதந்தோறும் வழங்காமல், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மொத்தமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதாகவும் செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021