மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூச் சம்பல்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூச் சம்பல்

வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் வயிறு, குடல் சம்பந்தமான நோய்களுக்கு உடனடி தீர்வு கொடுக்கக்கூடியது.வாழைப்பூ பொரியல் என்ற வழக்கமான ரெசிப்பியைத் தாண்டி இந்த வாழைப்பூச் சம்பல் செய்து சுவைக்கலாம். உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

என்ன தேவை?

நறுக்கிய வாழைப்பூ- 2 கப்

நடுத்தர அளவு வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 10

பூண்டு - 6 பல்

பட்டை - ஒரு துண்டு

ஏலக்காய் - 2

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

வாழைப்பூ, பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, ஏலக்காய், பட்டையைத் தாளிக்கவும். பின்னர், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வாழைப்பூ, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து மூடி போட்டு, அவ்வப்போது கிளறிவிட்டு, நன்கு வெந்தவுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ பிரியாணி

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 28 செப் 2021