மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க இன்று (செப்டம்பர் 27) முதல் கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

நேரடி விமான தடை காரணமாக, கனடாவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனர். இணைப்பு விமானங்களில் துபாய், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன், மூன்றாவது நாட்டில் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆனது.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 27) முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடா போக்குவரத்துத் துறை, பயணிகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பயணிகள் புறப்பட திட்டமிட்ட 18 மணி நேரத்துக்குள், டெல்லி விமான நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜெனஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கனடாவின் இந்த முடிவை இந்திய தூதர் அஜய் பிசாரியா வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள் செப்டம்பர் 27 முதல், டெல்லி மற்றும் டொரன்டோ /வான்கூவர் இடையே தினசரி விமானங்களை இயக்க உள்ளன. பயணத்தை மேலும் எளிதாக்க கனடா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் அஜய் பிசாரியா குறிப்பிட்டுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 27 செப் 2021