மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரிக்க இலக்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரிக்க இலக்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக்கம் செய்வது குறித்து ஏற்றுமதியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆட்சியர், “ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றம் செய்யும் பொருட்டு மத்திய வர்த்தக அமைச்சகம், மாநில அரசுடன் இணைந்து மாநில ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களின் குறைகளைத் தீர்க்க இந்தக் குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயத்த ஆடைகள், நெகிழி பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், ரசாயன பொருட்கள், சமையல் எண்ணெய், பசுமதியில்லாத அரிசி வகைகள் மற்றும் பருப்பு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு முயற்சிகள் மேற்கொள்ளும்.

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல் மார்ச் வரை 6514.08 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பிற நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை நான்கு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை அடைய அனைத்து ஏற்பாடுகள் மற்றும் வசதியாகத்தை மாவட்ட நிர்வாகம் செய்யும்” என்றார். பின்னர், கலந்தாய்வு கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏற்றுமதியாளர்களின் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 27 செப் 2021