மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

மத வழிபாட்டு தலங்கள் திறப்பு : பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!

மத வழிபாட்டு தலங்கள் திறப்பு : பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. தொற்று பரவலுக்கேற்ற வகையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வணிக வளாகங்கள் ,திரையரங்குகள் ,சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றை வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கோயில்களில் மக்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விசேஷ நாட்களில் கோயில் வாசலிலேயே மக்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, வழிபட்டு செல்கின்றனர். வார இறுதி நாட்களில் பெரும்பாலான திருமணங்கள் கோயில் வாசல் முன்பு நடைபெற்று வருகிறது.

இதனால் பலரும் வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ட்விட்டரில், “முதலமைச்சரின் பெருமுயற்சி மற்றும் அனைத்து அரசு துறைகளின் கடுமையான உழைப்பின் காரணமாக கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு முறைகளுடன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்..

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 27 செப் 2021