மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

உலக சுற்றுலா தினம்: எம்.பி கனிமொழியின் கோரிக்கை!

உலக சுற்றுலா தினம்: எம்.பி கனிமொழியின் கோரிக்கை!

உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழ்நாடு,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அனைவருக்குமே உலகை சுற்றி வர வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆசை என்பது மட்டுமில்லாமல், மன அழுத்தத்தை போக்கக் கூடிய மருந்தாக சுற்றுலா பயணம் உள்ளது. அவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போதுதான் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், மற்ற மாநிலங்கள், நாடுகளின் கலாச்சாரம் மற்றும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இது மனிதர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும். அதனால்,சுற்றுலா செல்வதை விரும்பாதவர் யாரும் இல்லை.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடந்த 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியை ‘சர்வதேச சுற்றுலா தினமாக’ ஐநா சபை அங்கீகரித்தது. இந்த நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் 1980ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று(செப்டம்பர் 27) சர்வதேச சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மிர்ச்சியில் சுற்றுலா தின சிறப்புப் பாடலை வெளியிட்டார். அதுபோன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில், “‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலாத் தலங்களை பாதுகாப்பாக வைப்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

உலக பொருளாதாரத்தில் இரண்டாவது பங்களிப்பு சுற்றுலா துறை மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 27 செப் 2021