மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: ரவை தட்டை!

ரிலாக்ஸ் டைம்: ரவை தட்டை!

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சட்டென்று செய்யக்கூடிய நொறுக்குத் தீனிகளில் இந்த ரவை தட்டையும் ஒன்று. ஹெல்த்தியான இந்த தட்டை, குழந்தைகளுக்கான பெஸ்ட் சாய்ஸ்.

எப்படிச் செய்வது?

இரண்டு கப் ரவையை வாணலியில் வறுத்து, தேவையான உப்பு கலந்து இரண்டு கப் தயிரில் போட்டுக் கலக்கவும். அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, சிறிதளவு பெருங்காயப் பொடி, சில துளிகள் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். பிறகு அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

அனைத்து வயதினருக்கும் ஏற்ற ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 27 செப் 2021