மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பிரியாணி

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பிரியாணி

சில பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’. ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றவும், வயிற்றுப்புண்ணை ஆற்றவும் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதற்கு சுவையான இந்த வாழைப்பூ பிரியாணி உதவும்.

என்ன தேவை?

நறுக்கிய வாழைப்பூ இதழ்கள் - 2 கைப்பிடி அளவு

சீரக சம்பா அரிசி - 2 கப்

நடுத்தர அளவு வெங்காயம் - 4

தக்காளி - 3 (பெரியது)

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

புதினா, கொத்தமல்லித்தழை (இரண்டும் சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு

பட்டை - 2

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 2

தயிர் - அரை கப்

பிரியாணி மசாலா - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

சீரக சம்பா அரிசியைக் கழுவி தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாழைப்பூவுடன், தயிர், பிரியாணி மசாலா, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய்களைச் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவிடவும். வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கிலும், புதினா, கொத்தமல்லித்தழை, தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் சேர்க்கவும். வாசனைப் பொருள்கள் வதங்கியதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கவும். பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினாவைப் போட்டு தக்காளி கரையும் வரையில் வதக்கவும். பின்னர் ஊறவைத்திருக்கும் வாழைப்பூவைப் போட்டு நெய் பிரியும் வரையில் சன்னமான தீயில் சுருள வதக்கவும். அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு மசாலாவில் கலந்துவிடவும். 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வைத்திருந்து பின்னர் தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் அடங்கியவுடன் சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய சண்டே ஸ்பெஷல் : தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 27 செப் 2021