மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

சிட்லபாக்கம் ஏரியின் புலப்படம் மற்றும் ஏரியைச் சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டடங்களை இடிக்கவும், ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையை அகற்றவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் நேற்று (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது, சட்டவிரோதக் கட்டுமானங்களைத் தடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

சிட்லபாக்கம் ஏரியைப் பொறுத்தவரை அங்குள்ள விதிமீறல் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பணிகள் முடிந்ததும் அறிக்கை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிட்லபாக்கம் ஏரியின் புலப்படம், ஏரியைச் சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 26 செப் 2021