மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

பீர் விலையில் முறைகேடு: இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம்!

பீர் விலையில் முறைகேடு: இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம்!

பீர் விலை நிர்ணய முறைகேடு வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பீர் மதுபானத்துக்கான விலையை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்திய வணிக போட்டி ஆணையம் பீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது.

இதில் 13 நிறுவனங்கள் விதிகளை மீறி விலை ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து நியாயமற்ற வணிக நடைமுறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி 2017ஆம் ஆண்டு தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. 2009 முதல் 2018 வரை அரங்கேற்றிய முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரித்து வந்த இந்திய வணிகப் போட்டி ஆணையம், யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் 231 பக்க உத்தரவில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்துக்கு ரூ. 752 கோடி அபராதமும் கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.121 கோடி அபராதமும் விதித்துள்ளது.

அனைத்து இந்திய பீர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் துணையுடன் இந்த முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் அந்த அமைப்புக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பீர் மதுபான விலை நிர்ணய முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பல நிறுவனங்கள் அபராத நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் பீர் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

ஞாயிறு 26 செப் 2021